Sri Sri Sri Guru Viswa Sphoorthi

குரு விஷ்வஸ்ஃபூர்தியின்

ஸ்ஃபூர்தி ஓம்...          ஓம் மகா விஷ்வா ரூபே ஷக்தி ரூபே விஷ்வஸ்ஃபூர்தி குருவே நமஹ
temple

The Scientific Saint & Divine Existence

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ குரு விஷ்வ ஸ்ஃபூர்த்தி ஒரு விஞ்ஞான துறவி. அவர் மனிதாபிமான மதம் மற்றும் நடைமுறை வேதாந்தம் போன்றவற்றை வலியுறுத்துகிறார். எளிமைக்கு உதாரணமாக திகழ்கிறார். மே ஒன்றாம் தேதி, 1941 ஆம் ஆண்டு, வியாழக்கிழமை அன்று ஆந்திர பிரதேசம், இந்தியாவில் ஒரு குக்கிராமத்தில் பிறந்தார். பிரபஞ்ச ரகசியம், அதன் தொடக்கம், மற்றும் நோக்கம், பிறப்பு, இறப்பு ரகசியம், மனித வாழ்வின் நோக்கம் போன்றவற்றிற்கு விடை தேட சிறு வயதிலேயே, ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது, குருஜி தன் வீடு, உறவினர்கள், நண்பர்களை விட்டு, வீட்டிலிருந்து வெளியேறினார். தியானம் செய்ய தொடங்கினார். காலப்போக்கில், தொடர்ந்து தியானத்தில் ஈடுபட்டதால், குருஜி மிக உயர்ந்த ஆன்மீக நிலை (9வது நிலை) பெற்று, பிரபஞ்ச உணர்வையும், இயற்கை கடந்த, மிக உயர்ந்த ஆற்றல்களை பெற்றார். அந்த நிலையை எட்டும் வரை, அவர் யாராலும் அறிய முடியாதவராக, மறைவாக வாழ்ந்தார். பிறகு, மனித சேவைக்காக சமூகத்தில் இணைந்தார். ஆன்மீகம் மேம்பட்ட விஞ்ஞானம் என்று கூறும் குருஜி, அதை விஞ்ஞான அடிப்படையில் விளக்குகிறார். அதனால், அவர் விஞ்ஞான துறவி என்று கருதப்படுகிறார்.

 

குருஜி – விஞ்ஞான துறவி

“விஞ்ஞானம் மற்றும் மனசாட்சியின் ஆதிக்கம் மற்றும் சங்கமத்தினால், பிரபஞ்ச அருள் கிளர்ச்சியின் மெய்ப்பொருள் உணர்வுடன் இருப்பதால்….விஞ்ஞான துறவி என்று அறியப்பட வேண்டும் என்ற மனச்சார்பு எனக்கு உள்ளது.”

 

பல வருட தியானத்தினால் ஈட்டிய ஆன்மீக செல்வம் ஒன்றே அவருடைய செல்வமாகும். அது மனித நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு தனி நபர் இதயத்திலும் தியானம் என்ற கோட்பாட்டை பதிய வைப்பது. அதன் மூலம், மதம், ஆன்மீகம் (இறைத்தன்மை), விஞ்ஞானம் தொடர்பான குழப்பத்தை நீக்கி, உள் விழிப்புணர்வை ஏற்படுத்தி, உடல், மனரீதியான உபாதைகளுக்கு நிவாரணம் அளித்தல், உள் மன அமைதியின் வாயிலாக உலக சாந்தி ஏற்படுத்தி, அமைதியாக, வசதியாக வாழ்வதற்கு வழிகாட்டுதல். இவையே குருஜியின் முதன்மையான நோக்கங்கள் ஆகும்.

பல ரூபங்களில், ஒரே நேரத்தில் குருஜியின் இருப்பு

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ குரு விஷ்வ ஸ்ஃபூர்த்தி தன்னுடைய இருப்பை பல ரூபங்களில், ஒரே நேரத்தில், பல இடங்களில் வெளிப்படுத்துகிறார். குருஜி பல ரூபங்களில் இருப்பதால், அவருடைய செயல்பாடுகளும் பன்முகமாக உள்ளது. அவருடைய பல ரூப இருப்புகளில் சில:

அ. பெளதிக உடலில் இருத்தல்

குருஜி தன் உடலில் ஒரு இடத்தில் இருந்து கொண்டு, தன் தினப்படி பணிகளை செய்வார், வழக்கம் போல் பக்தர்களுடன் உரையாடுவார். அதே சமயம், அவருடைய ஆன்மீக இருப்பை பல இடங்களில், பல ரூபங்களில் (மேலே குறிப்பிட்டப்படி) ஒரே நேரத்தில் வெளிப்படுத்தி, பக்தர்களுடன் உரையாடுவார்.

ஆ. வேறு உடல் மூலம் தொடர்பு (வேறு உடலில் குருஜியின் இருப்பு)

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ குரு விஷ்வ ஸ்ஃபூர்த்தி தன் அனைத்து ஆன்மீக செயல்பாடுகளையும், ”ஆன்” பக்தர்களுடன் உரையாடுவதையும் வேறு உடலின் வாயிலாக நிகழ்த்துகிறார் (பெளதீக உடலில் குருஜியின் இருப்பு). பல உடல்களை கருவியாக கொண்டு குருஜி பல செயல்களை ஒரே நேரத்தில் நிகழ்த்துகிறார்.

இ. நறுமணம் மூலம் இருப்பு (தனிச்சிறப்பான நறுமணம் மூலமாக குருஜியின் இருப்பு)

குருஜி தொடர்பான நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில், எந்த இடத்தில் நடந்தாலும், கண்களுக்கு புலனாகாத படி குருஜி வந்துள்ளார் என்பது நறுமணம் (தனிச்சிறப்பு வாய்ந்த நறுமணம்) மூலம் உணரலாம். அந்த இடத்தில் இருக்கும் அனைவரும் அவ்வித நறுமணத்தை உணர்ந்து, அனுபவிக்கலாம்.

குருஜி தொடர்பான நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்கள் மட்டுமல்ல, பக்தர்கள் குருஜியின் ஆன்மீக இருப்பை தனித்தன்மையான நறுமணம் மூலம் எந்த இடத்திலும், உதாரணமாக, சாலைகளில் நடக்கும் போது, வீட்டில் அமர்ந்திருக்கும் போது, விமானத்தில் பயணிக்கும் போது, திடீரென ஒரு வித நறுமணம் பரவுவதன் மூலம் குருஜியின் ஆன்மீக வருகையை (இருப்பை) உணரலாம். தேவை ஏற்பட்டாலோ அல்லது பிற காரணங்களுக்காகவோ, குருஜியை நேரடியாக காண முடியவில்லை என்றாலும், க்ஷணப்பொழுதில் குருஜியின் இருப்பை நறுமணம் வாயிலாக, அவர் எப்போதும் காலம், நேரம், இடத்துக்கு அப்பாற்பட்டவர் என்று குருஜியை பக்தர்கள் உணர்கிறார்கள். இவ்விதமான ஆன்மீக இருப்பு எந்த காலக்கட்டத்திலும் யாராலும் (எந்த காலத்திலும்), எந்த இடத்திலும், மனித இன வரலாற்றில் அறியப்படவில்லை.

ஈ ஒலி, ஒளி உணர்வு

இது குருஜியின் ஆன்மீக இருப்பை, ஒலி ஒளி வாயிலாக உணர்வது. யார் அமைதியாக குருஜியின் மூல மந்திரத்தை தொடர்ந்து ஜபிக்கிறார்களோ, அவருடைய ஒலி ஒளி உணர்வு அத்தகையவர்களுக்கு ஏற்படுகிறது. மீடியமாக இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, நேரடி அறிமுகம் இல்லாமல் இருந்தாலும், அவரிடம் நம்பிக்கை கொண்டு, தியானம் செய்பவர்களுக்கு, அவர் ஒலி ஒளி உணர்வை ஏற்படுத்துகிறார்.

உ. காட்சிப்படுதல் (தியானத்தில் அகக்கண் வழியாக குருஜியை காணுதல், பேசுதல்)

காட்சிப்படுதல் நிலையில் குருஜியிடம் பக்தர்கள் பேசலாம். ஒரு தனி நபர் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் போது, குருஜி அவரை விழிப்புணர்வு நிலைக்கு உயர்த்துகிறார், அது ’காட்சப்படுதல் நிலைஎன்றும் குறிப்பிடப்படுகிறது. அது ”ஆழ் சிந்தனை நிலை” மற்றும் “தியான நிலை”, இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையாகும். அந்த நிலையில், ஒரு தனி நபர் தன் மனதை (எவ்வித எண்ணங்களும் இல்லாமல்) ‘நிர்வ’ அகத்தில் காண்பார். அந்த நிலையில், ஒருவர் (எண்ணங்களை ஆக்ரமித்திருக்கும்) குருஜியை கண்டு, அவருடன் பேசலாம், அவர் ஆலோசனைகளை பெறலாம். குருஜி, இந்த செயல் நிகழ்வுக்கு தன் ஆற்றலை தியானம் செய்யும் நபருக்காக பயன்படுத்துகிறார்.

ஊ. அலைகள் மற்றும் அதிர்வுகள்

குருஜி தன் இருப்பை அலைகள் மற்றும் ஆன்மீக அதிர்வுகள் மூலம் வெளிப்படுத்துகிறார். இது பொதுவாக பல பக்தர்களின் பொதுவான தியான அனுபவமாக உள்ளது.

எ. தெய்வீக சிகிச்சை

குருஜி, தன் இடத்தில் இருந்து கொண்டே, ஆன்மீக அதிர்வுகள் மூலம், மருத்துவ ரீதியான சிகிச்சையும் அளிக்கிறார். குருஜி தெய்வீக ஆற்றல் மூலம், ‘தெய்வீக சிகிச்சநிகழ்பாடு மூலம் குணப்படுத்துகிறார்.

குறிப்பு:குருஜி தன் இருப்பை வெளிப்படுத்தி மீடியம் மூலம் செயல்படுவது ஒரு தனி நபர் மூலம், ஒரு இடத்தில் மட்டுமல்லாமல், பல இடங்களில், ஒன்றுக்கும் மேற்பட்ட மீடியம் மூலம், ஒரே நேரத்தில் நிகழ்கிறது. மீடியம் மூலம் செயல்படும் போது, குருஜி (பெளதிக உடலில்) தன் உடலில், அவ்வித செயல்பாடுகள் நிகழும் இடத்திலிருந்து வெகு தொலைவில், ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், தன் அன்றாட பணிகளை வழக்கம் போல் செய்கிறார். குருஜி ஒன்றுக்கும் மேற்பட்ட மீடியத்தில் இருக்கும் போது, குருஜி பல விதமான விஷயங்கள், பிரச்சினைகள் குறித்து, வெவ்வேறு தனிநபர்களிடம், ஒரே நேரத்தில் விவாதிப்பார். பல மீடியம் மூலம் ஒரே நேரத்தில், ஒரே இடத்திலோ அல்லது வெவ்வேறு இடங்கிளிலோ தன் இருப்பை வெளிப்படுத்துவது, வெவ்வேறு விதமான தலைப்புகளின் கீழ் ஆழ்ந்த கருத்துக்களுடன், ஒரே நேரத்தில் விவாதம் நடத்தும் குருஜியின் திறன், பல் வேறு ரூபங்களில் அவருடைய இருப்பு, அதாவது, தியானத்தில் ஈடுபடுவோரிடம் நேரடியாக உரையாடுவது (காட்சிபடுதல் நிலையில்), நறுமணம் மூலம் வெளிப்படுதல், மற்றும் ஒலி ஒளி உணர்வு, போன்றவை மேலே குறிப்பிட்டுள்ளபடி, குருஜி எங்கும் நிறைந்திருக்கிற, எல்லாம்வல்ல, எல்லாம் அறிந்த, எல்லாவற்றையும் படைக்கும், பல்வகையாக குருஜி வெளிப்படுகிறார் என்பது எவ்வித சந்தேகமும் இன்றி தெளிவாகிறது.

பிரிவுகள்
ஸ்ஃபூர்தி ஓம்
Recent Videos
Send feedback
Connect With Us

© 2020 Sri Sri Sri Guru Viswa Sphoorthi   All rights reserved.

© 2020 Sri Sri Sri Guru Viswa Sphoorthi   All rights reserved.   Terms & Conditions Privacy Policy